மாடம்
[ WORD BANK ]

என் பெயரின் பணி என்ன?
பிறருக்கு என்னை அடையாளம் காட்டுவது தானே!
சரி தான். ஆனால் என்னுடைய எந்த அடையாளத்தைக் காட்டுவது என் பெயரின் பணி?
நான் யாருக்குப் பிறந்தேன், எந்த குடும்பத்தில் பிறந்தேன், எந்த இடத்தில் பிறந்தேன் என்பதோடு எந்த இனத்தில் பிறந்தேன் என்பதையும் அடையாளம் காட்டுவது தானே என் பெயரின் பணி?
அவ்வகையில், கோலப்பன் வேலாயுதம் என்ற எனது பெயர், நான் வேலாயுதம் அவர்களின் மகன் என்பதோடு நான் ஒரு குமரி மாவட்டத் தமிழன் என்பதற்கான அடையாளமும் ஆகும். அதோடு மட்டுமல்லாது தமிழை அழியாமல் காத்து வாழவைப்பதில் தமிழ்ப்பெயரின் பங்கு இன்றியமையாததோடு அளப்பரியதுமாகும்.
வலிமையான வேராதாரம் கொண்ட தமிழை வெள்ளத்தில் அடித்துச் செல்ல விடாமல் காத்து நிற்க வேண்டியது தமிழர் கடமையல்லவா?
ஆகவே, தமிழில் பெயர் வைப்பதென்பது நம்மை அடையாளப்படுத்துவதோடு தமிழைக் காப்பதுவுமாகும். ஆகவே, அது நமது கடமையும் பொறுப்பும் அதோடு தமிழின் தேவையுமாகும்.
இவ் விணையதளத்தின் கடமைகள் பலவற்றுள் தமிழ்ப் பெயர்க் களஞ்சியம் ஏற்படுத்துதலும் ஒன்றாகும். இக் களஞ்சியத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் தாவரம், விலங்கு, நிலம், பொழுது, இயல்பு, தோற்றம் மற்றும் இறைமை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டு அகர வரிசையில் இடம் பெறும். இப் பணிக்கு ஆவலும் உழைப்பும் கொண்டு பங்களிக்க எண்ணுவோர் இத் தளத்தில் பதிந்து அடையெண் பெற்று நம்மோடு இணையலாம்.
தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுக்கலாம்.
வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!